Monday 3 December 2012

பாலாவின் "பரதேசி"யில் காப்புரிமை மீறலா?

          பாலாவின் இயக்கத்தில் "பரதேசி" மிக விரைவில் தெருவுக்கு வரப் போகிறதாம்.  விளம்பரங்கள் பலமாக இருக்கின்றன.  மூலக்கதை பற்றி மட்டும் யாரும் மூச்சு விடுவதில்லை.  பத்திரிகைச் செய்திகளிலிருந்தும் படம் பற்றிய சில பேட்டிகளிலிருந்தும், பரதேசியின் கதை தேயிலைத் தோட்டம் பற்றியது என்பது தெரிய வருகிறது.  இந்திய சுதந்திரத்திற்கு முன்னர் தேயிலைத் தோட்டங்களில் வாழ்ந்த தொழிலாளர்களின் வாழ்க்கையைப் படம் பேசுகிறதாம்.  அடிமைகளாக நடத்தப்பட்ட அவர்கள் அனுபவித்த கொடுமைகள் சித்தரிக்கப்படுகிறதாம்.  ஆக, அது தேயிலைத் தோட்ட அசல் வாழ்க்கையைப் பற்றி சுமார் முப்பத்திஐந்து ஆண்டுகளுக்கு முன்பே நாவலாசிரியர் டி.செல்வராஜ் எழுதிய "தேனீர்" நாவலின் தழுவல் தான் ‘பரதேசி’ என்ற கருத்து இப்போது பரவலாகப் பேசப்படுகிறது.  நாவலாசிரியர் செல்வராஜீம் இன்னும் தகவல் அறிந்த பலரும் கொதித்துப்போய் இருக்கிறார்கள்.  தன் படைப்பின் காப்புரிமை அப்பட்டமாக மீறப்பட்டிருக்கிறது என்று நாவலாசிரியர் கூறுகிறார்.  காப்புரிமை மீறப்பட்டிருக்கிறது என்பது உறுதியானால் சட்ட பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கவும் அவர் தயாராகிறார். 

3 comments:

  1. தோழர் சிகரம் செந்தில்நாதன் அவர்களின் வலைப்பூவில் வெளியான “பாலாவின் பரதேசியில் காப்புரிமை மீறல்” என்ற குறிப்பில் எனது மனத் தகிப்பினை அவர் சரியாகவே பதிவு செய்துள்ளார்.

    பாலாவின் ‘பரதேசி’ ‘தேநீர்’ நாவலின் தழுவல் என்கிற உண்மையையும் தெளிவுபட விளக்கி உள்ளார்.
    சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னால் வெளியான ‘தேநீர்’ மலையாளத்திலும் “தேயிலைக்காடு” என்று மொழி பெயர்க்கப்பட்டு வெளியானது ‘தேநீர்’ நாவலை தமிழகத்தில் உள்ள கல்லூரிகள் மற்றும் பல்கலைகழகங்களிலும் பட்ட மேற்படிப்பு படிக்கும் மாணவர்கள் பலர் தங்களின் ஆய்வுக்காக பயன் படுத்தி வருகின்றனர்.பரதேசி படக்கதை வெளியான போது பல்கலைகழக மாணவர்களும், பேராசிரியர்களும் என்னிடம் இக்கதை தேனீர் போலவே இருப்பதாக விசாரிக்க ஆரம்பித்தனர். தோழர் செந்தில்நாதன் குறிப்பிட்டிருப்பது போன்று மூலக்கதை பற்றிய விவரம் இன்று வரை சிதம்பர ரகசியமாகவே இருந்து வருகிறது.. படம் பற்றிய செய்திகளையும், நேர்காணல் களையும் படிக்கும் போது நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னால் தமிழகத்தில் இருந்த தேயிலைத்தோட்டங்களுக்கு கூலிகளாகப் போன மக்கள் படும் அவஸ்தைகளையும் படம் சித்தரிப்பதாக மட்டும் தெரிகிறது. பட்த்துக்கு வசனம் எழுதும் நாஞ்சில் நாடன் கூட ‘பரதேசி’ படத்தில் கையாண்டிருப்பது 1940 களில் நிகழ்ந்த மிக முக்கியமான விஷயம் என்று மட்டும் சொல்கிறாரே அல்லாமல் மூலக்கதை பற்றிய விவரத்தை வெளியிட வில்லை.

    நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்னால் தமிழ் நாட்டிலிருந்து தேயிலைத் தோட்டங்களுக்கு கூலிகளாக போன மக்களின் அவலங்களை சித்தரிக்கும் ஒரே தமிழ் நாவல் “தேனீர்’ மட்டும் தான். அது மட்டுமில்லாமல் நாடு விடுதலை அடைவதற்கு முன்னால் தேயிலைத் தோட்டங்களில் வாழ்ந்த கூலிகள் பற்றிய நேரடி அனுபவம் என்னை அல்லாமல் எந்த தமிழ் மலையாள படைப்பாளிக்கும் கிடையாது. (தேயிலைத் தொழிலாளர் வாழ்க்கை இன்று முற்றிலும் மாறிப் போய்விட்டிருக்கிறது). ஏனெனில் நான் அந்த மக்களோடு மக்களாக அவர்களில் ஒருவனாக வாழ்ந்தவன். எனது நேரடி அனுபவமே ‘தேநீர்’ நாவல்.
    எனது பாட்டனார் ஆறுமுகமும் அவர்களது மனைவியும் தமிழ் நாட்டிலிருந்து தேயிலை எஸ்டேட்டுகளுக்குக் கூலிகளாகப் போனவர்கள். கடுமையான உழைப்பு காரணமாக படிப்படியாக முன்னேறி கங்காணியானவர். என் தகப்பனார் மற்றும் அவரது சகோதரர்களின் காலத்தில் வாக வானா, தென்மலை மற்றும் நாக மலை ஆகிய மூன்று தேயிலை எஸ்டேட்டுகளில் எங்கள் குடும்ப கங்காணித்தனத்தின் கீழ் சுமார் 800 தொழிலாளர்கள் வேலை செய்தனர். வெள்ளைக்கார ஜேம்ஸ் பின்லே கம்பெனி தேவிகுளம் தாலுக்காவை இன்றைய இடுக்கி மாவட்த்தையே தனது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருந்த்து. கம்பெனி தனது கம்பெனி உத்தியோகஸ்தர்கள் கங்காணிகளின் பிள்ளைகள் படிப்புக்காக ஆங்கிலத்தில் மூணாறில் நடத்திய பள்ளிக் கூடத்தில் படித்தவன். நான் எனது மாணவ பருவமும் இளமைக்காலமும் தேயிலை தோட்ட வாழ்க்கையாகவே இருந்தது. எனவே சுதந்திர முற்கால தேயிலைத் தோட்ட்த் தொழிலாளர் பற்றிய அறிவும் அனுபவமும் என்னைத் தவிர வேறு எந்த தமிழ், மலையாளப் படைப்பாளிக்கும் கிடையாது.
    நாடு விடுதலை அடைவதற்கு முன்னால் உள்ள தோட்ட்த் தொழிலாளர் வாழ்க்கை முறை, சூழல் பற்றிய அறிதலோ அனுபவமோ பரதேசி பட இயக்குனருக்கோ, கதாசிரியர் என்று சொல்லப்படுபவருக்கோ வசனம் எழுதுபவருக்கோ கிடையாது.

    இவைகள் மூன்றும் உள்ள ஒரே படைப்பு ‘தேநீர்’ நாவல் மட்டுமே. எனவே தேநீர் நாவலின் சாரம் ‘பரதேசி’யாக மாற்றப்பட்டு இருக்கிறது. இது அப்பட்டமான காப்பீட்டு மீறல் ஆகும். இந்த காப்பீட்டு உரிமை மீறல் எந்த ஒரு உண்மையான படைப்பாளியாலும் சகித்துக் கொள்ள பொறுத்துக் கொள்ள முடியாத ஒன்றாகும்.

    ReplyDelete
  2. when the real story is not yet known,is it not too early to attack&criticize Bala?.atleast senthilnathan should know that in the absence of concrete evidence,it is unfair to accuse another of copy right violation.so let us keep our fingers crossed till the cat is let out of the bag.
    i read in wickiepedia that this film is based on RED TEA by PAUL HARRIS DANIEL who also lived in a tea estate before independence &who knew the plight of plantation workers.further there is one more book in tamil known as NADU VITTU NADU VANTHU by Muthammal Palanisamy which was translated in tamil by the author herself from her autobiography written in english FROM SHORE TO SHORE inwhich she depicted the misery&slavery of plantation workers in Malaysia during the pre independence period.-rajasekaran

    ReplyDelete